Thursday, February 26, 2009

தயவு செய்து ஓட்டு போடுங்கள்

இந்தப் பதிவு இன்னமும் வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்களுக்காக.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆதரவின் பேரிலும் அவர்களின் பரிந்துரையின் பேரிலும் JANAAGRAHA என்ற தொண்டு அமைப்பு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைனிலேயே வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு வழிவகை செய்திருக்கிறது.

அது http://jaagore.com/ என்ற வலைப்பக்கமே.

இந்த http://jaagore.com/ வலைப்பக்கத்தில் நீங்கள் எளிய முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். தேவையான மற்றும் கேட்க்கப்படுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்துவிட்டு submit பட்டன்- ஐ அழுத்தினால் போதும். அடுத்து நீங்கள் பதிவு செய்ததற்க்கான voter registration forms தோன்றும். பின்பு அந்த forms- ஐ பிரிண்ட் செய்து கொண்டு அதே வலையில் கொடுக்கப்பட்டுள்ள, உங்கள் ஊரில் அல்லது உங்கள் ஊரின் அருகில் உள்ள அரசாங்க அலுவலகத்திற்கு சென்று print செய்த forms- ஐயும் அதனுடன் உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் கொடுத்தால் போதும் அன்றே அல்லது ஓரிரு நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு கிடைக்கபெறும்.

இந்த http://jaagore.com/ எப்படி உருவானது மற்றும் அதனைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்யவும்.

http://www.janaagraha.org/node/2271

எந்த கட்சிக்கு வேணாலும் ஓட்டுப்போடுங்க யாருக்கு வேணாலும் ஓட்டுபோடுங்க ஆனா தயவு செஞ்சி ஓட்டுபோடுங்க.

நன்றி.

No comments: